166
மத்திய மாகாணத்தில் மத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் இவ்வாறு முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட வகையில் சில குழுக்கள் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love