158
உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள், இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
அதன்போது ஹிந்தி மொழிக் கற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ் இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love