Home இலங்கைஇந்தியாவை பிரதிபலித்து வல்வெட்டித்துறையில் பட்டங்கள்

இந்தியாவை பிரதிபலித்து வல்வெட்டித்துறையில் பட்டங்கள்

by admin
இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை  முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியக் கொடியின்  நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More