Home இந்தியாதமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

by admin


சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் இப் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளதாகவும் சென்னையில் வள்ளுவர் கோட்டம், ஆதம்பாக்கம், மின்ட் உள்ளிட்ட 4 பகுதிகளிலும், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு மாணவர்கள், விவசாய சங்கத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட கட்சி சாராதவர்களும் ஸ்டாலினுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வருகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More