267
இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு உரியதாக கருதப்படும் வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் படகுகள் மற்றும் புகையிரத சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை அண்மித்த வீதிகள் சிலவும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த வெடிபொருள் 226 கிலோ எடை உடைய சக்திவாய்ந்த வெடிபொருள் எனவும் இது ஜேர்மனியின் எஸ்சி250 என்று நம்பப்படுவதாகவும் பிரித்தானிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love