215
நாடளாவியரீதியில் பணிப்புறக்கணி ப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் அங்கு இடம்பெறவில்லை. அதனால் தூரப்பி ரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளர்களும் சிகிச்சை பெற முடியாத நிலையில் திரும்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love