205
ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love