227
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை இறுதி கிரியைகள் காலை 9.30 மணி முதல் மதியம் 11 மணி வரையில் நடைபெற்றது.
அதனை அடுத்து அவரது பூதவுடல், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மதியம் 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் , பல்கலைக்கழக நிர்வாகத்தினர் , கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் , விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Spread the love