226
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love