உலகம் முழுவதும் மார்ச் 08 பெண்கள் வன்முறைகளுக்கு எதிரான முன்னெடுப்பாக சுதந்திரத்துவம், சமத்துவம், அனைத்து துறைகளிலும் வாய்ப்புக்களை அதிகரித்தல் என்னும் நோக்கில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் இலத்திரனியல் தொழில்நுட்ப (னுபைவையட றுழசடன) வளர்ச்சில் பெண்களுக்கான வாய்ப்பினை அதிகரிப்பதோடு அவற்றில் பெண்களின் பங்குபெற்றலை அதிகரித்தல் என்னும் தொனிப்பொருளில் பெண்களும் சக மனிதராய் உணர்தலும் அனைத்து மனிதர் போல் பெண்ணும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகொண்ட மனிதராய் வாழ்தல் என்னும் நோக்கில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண், பெண்மை, தாய்மை என்னும் இரு கருத்தியலில் நோக்கப்படுகின்றாள். சந்ததிப்பெருக்கும் உயிரியாகவும் கவர்ச்சி, நுகர்வு என்னும் கருத்தியலில் கட்டமைக்கப்பட்டுள்ளாhள். குழந்தைப்பேறு, குழந்தைப்பராமரிப்பு, குடும்பம் என்னும் நோக்கில் பண்பாட்டுச் சமூகக்கட்டுமானங்கள், இலக்கியங்கள் சடங்குகள் ஊடாக பெண் வலியுறுத்தப்படுகின்றாள். ஏட்டினைத்தொடுவது தீட்டு, என சமயங்கள் பெண்ணை தீட்டாய் சொர்க்க வாசலை அடைக்கும் பேயாய் பிறப்பில் பெண் இழி பிறப்பாய் கட்டமைத்தது. மறுபக்கம் பெண்ணின் கருவளையம் தாய்மை என்னும் புனிதப் பொருளாய் வழிபடப்பட்டது.
இங்கு பெண் என்பது கவர்ச்சி தன்மை கொண்டதாகவும் வழிபாடு, போற்றுதலுக்குரியதாகவும் சமூகக் கருத்தாக்கங்கள் கட்டமைத்துள்ளன. இத்தகைய சூழலில் பெண்ணும் சாதாரண மனிதராய் ஜனநாயக உரிமை கொண்டு வாழ்வதற்கான மனித உயிரியாய் அனைவரும் சமஉரிமையுடன் வாழும் உலகினை உருவாக்குவதற்காக உலகப் பரப்பில் பெண்கள் போராhடத் தொடங்கினர். அனைத்து விதமான ஒடுக்குதலுக்கும் பாரபட்சங்களுக்கும் எதிராக போரட்டங்களை முன்னெடுத்தனர். இப் போராட்ட வரலாற்றில் உலகப்பரப்பில் உள்ள பெண்கள் ஒன்றாய் இணைந்தனர். தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, சம்பளம், வேலைச்சுமை என உலகம் முழுவதும் இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. 1789 இல் சதந்திரத்துவம் சமத்துவம் பிரதிநித்துவம் என்ற கோரிக்கையினை முன்வைத்து பாரிஸில் பெண்கள் போராடினார்கள். 1850 களின் பின்னர் பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்யத் தொடங்கினர். இரட்டை வேலைச்சுமை என்பது பெண்கள் மீது திணிக்கப்பட்டது. பெண்கள் அதிக மணிநேர வேலை அத்துடன் குறைந்த ஊதியம் பெறும் கூலித்தொழிலாளிகளாக நடாத்தப்பட்டனர். இதற்கு எதிராய் 1910 டென்மார்கில் பெண்கள் உரிமைக்கான மாநாடு நடாத்தப்பட்டது. 1917 இல் ரஷ்யாவில் பெண்கள் புரட்சி இடம்பெற்றது. அத்தோடு 1913 – 1920 களில் உலகப் போருக்கு எதிராக ரஷ்சியப்பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜேர்மனியைச் சேர்ந்த கிளராஜெட்கின் பெண்கள் தினத்தினை கொண்டாட முடிவெடுத்தார். பெண்கள் மீதான எல்லா விதமான ஒடுக்குதல்களுக்கும் எதிராகவும் பெண்கள் தினத்த்pனை மார்ச் 8 கொண்டாட முடிவெடுத்தனர். பின்னர் 1975- 1977 களில் பெண்கள் தினம் சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 1990 களின் பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் பரவலாய் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாய் சமஉரிமை, சமவாய்ப்புகள், அனைத்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், பெண்களும் இயற்கையும், அனர்த்த சூழலின் பெண்களின் பாhதுகாப்பு போன்ற நோக்கங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படடு வருகின்றது. பெண்களும் இவ் உலகில் சம அந்தஸ்த்து கொண்டு பெண் என மதிக்கப்படும் ஒரு சூழலலை உருவாக்குதலை நோக்காகக் கொண்டு பெண் மீதான கட்டமைப்பு பண்பாட்டு ஒடுக்குதலை கேள்வி கேட்பதும் அனைவருக்குமான சமத்துவ வாழ்தலை முன்வைப்பாக பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. ஒடுக்குதல்களையும் பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமூகத்திற்கான தேவைப்பாட்டினை உணர்த்துவதாய் அத்தகைய சமூக உருவாக்கத்தினை முன்னெடுக்கும் செயற்பாடாய் செயல்வாதமாய் உலகப்பரப்பில் பெண்கள் அமைப்புகள், சமூகக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள், கல்விசாரா நிறுவனங்கள,; கிராமட்டக் குழுக்கள் போன்ற பல தரப்புகளில் பெண்கள் தினம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
உலகம் முழுவதும் நிகழும் பெண்கள் மீதான அனைத்துவிதமான ஒடுக்குதல்களையும் பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமூகத்திற்கான தேவைப்பாட்டினை உணர்த்தும் அதிகாரத்த்pற்;கு எதிரான செயற்பாடாய் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்கள் தினம் எவ்வாறு பொதுவெளியில் குறிப்பாய் முதலாளி சந்தைப்படுத்தல் எவ்வாறு கையாள்கிறது என்பது இன்றைய சூழலில் இத்தகைய செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாகின்றது.
முதலாளியச் சந்தை பெண் உடலை சந்தைக்கான பொருளாக மாற்றுகின்றது. மறுபக்கம் பெண்கள் தினம் சந்தைப்படுத்தலுக்கான உத்தியாக பயன்படுத்தப்படுகின்றது. உலகப் பரப்பில் கொண்டாடப்படும் பெண்கள் தின உருவாக்கம் அதன் பின்னணியாய் தொடர்ந்து வரும் பெண்கள் போராட்டங்கள் அதன் காத்திரமான வாழ்தலுக்கான செயற்பாட்டு கருத்தமைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் தங்கள் உற்பத்தி பொருட்களுக்களை சந்தைப்படுத்துவதற்கான விளம்பரமாக பெண்கள் தினம் மாற்றப்பெறுகின்றது.
இவை பால்நிலைப் பாரபட்சங்களை மீளவும் அதிகரிப்பதற்கானதாகவும் வலியுத்துவதாகவும் செயற்படுவதனை அவதானிக்கலாம். இதற்கு உதாரணமாய் பெண்கள் தினத்தினை முன்னிட்டு விசேட சலுகைகளும் விசேட விலைக்கழிவுகளும் போன்ற விளம்பரங்கள். பெண்கள் பொற்கணக்கு, தங்க நகைக்கடைகளில் விசேட தள்ளுபடி, வீட்டு அலங்காரப்பொருட்கள், அழகு சாதானப்பொருட்கள், போன்றவற்றிக்கான விசேட தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பரவலாய் காணமுடிகின்றது. இத்தகைய விளம்பரங்கள் எதனை வலியுறுத்துக்கின்றன. என்பதற்கு மேலாக பெண்கள் தினம் கொண்டாப்படும் நோக்கம் அதன் புரிதல் அதன் தார்மீகத்தினை இல்லாமல் செய்வதாக இத்தகைய விளம்பரங்கள் அமைகின்றன. இத்தகைய முதலாளியம் அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் எதிராக செயற்படும் பெண்கள் போராட்டங்கள் அதனை கொண்டாடும் பெண்களை ஒன்று சேர்க்கும் தளங்களாய் தங்கள் மீதான ஒடுக்குதலைப் பேசவிளைகின்ற அனைத்த விதமான சமூக மனிதர்களின் போராட்டங்களையும் செயல்வாதத்pனையும் மீளவும் ஒரு பாலியல் பாரபட்ச அதிகார சூழலுக்குள் கொண்டுசெல்ல முனைகின்றது.
இத்தகைய முதலாளிய சந்தைதப்படுத்தல் உத்தியாக செயற்படுவதனைத் தாண்டி இத்தகைய விளம்பரங்கள் நம் முன் முன்வைக்கும் சமூகம், வாழ்வியல் என்பது எத்தiகையது? அல்லது பால் சார்ந்த பாரபட்ச அதிகாரம் கொண்ட சமூகத்தினை அது மீளவும் வலியுறுத்துவதற்கான காரணங்கள் என்ன? போன்ற கேள்விகளை எழுப்புவதும் இதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் இன்றைய சூழலில் அவசியமானது.
கலாவதி கலைமகள்