Home இலங்கையாழில் பாண் விலை குறைப்பு

யாழில் பாண் விலை குறைப்பு

by admin
யாழ்.  மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலத்தில் மேலும் பாணின் விலை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
200 ரூபா பாண் விற்கும் போது விலையை தொடர்ச்சியாக பேணுவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு 200 ரூபாய் கட்டுப்பாட்டு விலையினை செயற்படுத்தி  பாணின் விலையை உயர்த்தாது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஒரு கட்டுப்பாட்டு விலையினை பேணியிருந்தோம்.
 தற்பொழுது கொழும்பில் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைக்கவுள்ளார்கள் அதற்கு நிகராக நாங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இறாத்தல்  பாணின் விலையினை பத்து ரூபாய் குறைப்பதற்கு இணங்கியுள்ளோம்.
பாண் உற்பத்தியில்  கொழும்பு மாவட்டத்துடன் எமது யாழ்ப்பாண மாவட்டத்தினை ஒப்பிட முடியாது  தற்பொழுது 170 ரூபாய் விற்கு தான் பாண்  விற்க உள்ளோம்.
 எதிர்வரும் காலங்களில் இதனை விட மிகக் குறைவான விலைக்கு  பாணை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More