ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதும் காயமடைந்தும் உள்ளனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (09.03.23) நடைபெற்ற அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை எனக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
Spread the love
Add Comment