191
வீமன்காமம் பகுதியில் காணி ஒன்றில் நிலக்கண்ணிவெடி ஒன்று காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த . காணியின் உரிமையாளராலேயே இவ்வாறு நிலக்கண்ணிவெடி காணப்பட்டமை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று குறித்த நிலக் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் குறித்த பிரதேசம் இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love