குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
உத்தேச புதிய அரசியல் சாசனம் சிங்கள இனத்தையோ அல்லது பௌத்த மதத்தையோ மலினப்படுத்தாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட உள்ள அரசியல் சாசனம் சிங்கள இனத்தையோ அல்லது பௌத்த மதத்தையோ பலவீனப்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டுகள் நாட்டில் யுத்தம் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் அரசியல் சாசன மாற்றம் செய்வதாக சில ஊடகங்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும், அவைத் தலைவராகிய தாமும் நல்ல பௌத்தர்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனவே தாங்கள் மதத்திற்கோ கலாச்சாரத்திற்கோ குந்தகம் ஏற்பட செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.