119
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிரான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக இந்த சந்திப்பின் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Spread the love