188
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நேற்றிரவு குடியிருப்பொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து மீட்டுள்ளதுடன் . எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love