நேற்றையதினம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் 3 இளைஞர்களின் சடலங்கள் இன்று(22) கடற்படை சுழியோடிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் குளிப்பதற்காகச் சென்ற நிலையில் நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் ஒருவரின் சடலம் நேற்று(21) மீட்கப்பட்டிருந்தது
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்று வரும் இளைஞர்களே இவ்வாறு உயிாிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று சிறு பிள்ளைகள் உட்பட பலர் உயிரிழந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.