189
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில் (Nashville) எனும் இடத்தில் உள்ள தனியாா் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயதான மூன்று சிறுவர்களும் 3 பாடசாலை ஊழியர்களுமாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளனா். குறித்த பாடசாலை ஊழியர்களில் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
அதேவேளை துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் 28 வயதான ஒரு பெண் என தொிவித்துள்ள காவல்துறையினா் தாம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் அவா் கொல்லப்பட்டுள்ளாா் எனவும் தொிவித்துள்ளனா்.
Spread the love