இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத்தலமான பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (30 ) ராம நவமியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கிணற்றுக்கு மேலே போடப்பட்டிருந்த கொங்ரீட் தளமொன்றில் பக்தர்கள் ஏறி நின்ற போது பாரம் தாங்காமல் கொங்ரீட் தளம் உடைந்தமையினாலேயே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
40 அடி ஆழமான அந்தக் கிணறு, 4 தசாப்தங்களுக்கு முன்னர் மூடப்பட்டதன் பின்னரே இந்த வழிபாட்டுத்தலம் நிர்மாணிக்கப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது