Home இலங்கைஅனலைதீவில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

அனலைதீவில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

by admin
யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை  420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளை கடற்படையினர் கடலில் வழிமறித்து சோதனையிட்ட போது, இரண்டு படகுகளில் இருந்தும் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இரண்டு படகுகளில் இருந்த இருவரையும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அனலைதீவு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட நபர்களையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும்  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More