குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
அரச சொத்து துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை 200 வீதம் உறுதி செய்து கொண்டதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
200 வீதம் உண்மைத் தகவல்களை உறுதி செய்து கொண்டதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறைந்த பட்சம் இரண்டு சாட்சியாளர்களை கொண்டு விசாரணைகளை நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.ஒரு சாட்சியாளர் ஏதேனும் சந்தர்பத்தில் மாறினாலும் சாட்சியங்களை உறுதி செய்து கொள்ள இது வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.