152
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையிலுள்ள 16 ஏக்கர் காணி நீதிமன்ற உத்தரவின்படி எதிர்வரும் 29ஆம் திகதி ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு சொந்தமானதென நம்பப்படும் இக்காணிக்கான அடிப்படை தொகையாக மதிப்பீட்டு திணைக்களத்தினால் 208 மில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவும் காணியில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமையாளரும் இக்காணி தமது இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love