யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.04.23) இரவு இடம்பெற்ற விபத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் காவற்துறை நிலையத்தில் பணியாற்றும் உதவிப் காவற்துறை அத்தியட்சகரான குருநாகலை சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த காவற்துறை அதிகாரி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், எதிர் திசையில் வந்த லொறி காவற்துறை அதிகாரி மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் பேருந்து சாரதி மற்றும் லொறி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.