கடந்த யுத்த காலத்தில், இலங்கை ராணுவம் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள், எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்விக்கான பதிலை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ, தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றதால்தான் யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் எனினும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட குழப்ப சூழ்நிலைகள் காரணமாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும் ஆயுத கொள்வனவைப் பொறுத்தவரையில் முழுமையாக சீனாவை நம்பி செயற்படும் நிலையே இருந்தது எனவும் தெரிவித்தார்.
ஆத்துடன் பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பாரியளவில் ஆயுதங்களை வழங்கியதோடு, விமானப்படை தாக்குதலுக்கான விமானங்களை வழங்கி உதவின எனவும் அவர் தெரிவித்துள்ளார்.