171
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,
யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவரின் பெயரை தொலைபேசியில் கூறி , தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் , மாணவி ஒருவருடன் ஆபாசமாக கதைத்து , ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பியுள்ளா ர்.
அது தொடர்பில் மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலைக்கு முன்பாக கூடி , குறித்த ஆசிரியரை வெளியே வருமாறு கோரி நின்றனர்.
அதனால் ஆசிரியர் பயம் காரணமாக பாடசாலையின் பின் பக்கத்தால் தப்பி சென்றார். அதற்கிடையில் அதிபரினால் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினா் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது மாணவிக்கு அழைப்பு எடுத்த தொலைபேசி இலக்கத்தை பெற்று அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தொலைபேசி “சிம்” அட்டை ஆசிரியரின் பெயரில் இல்லாமல் வேறு நபரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த சிம்மை பெற்ற நபர் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love