207
கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் -4B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக இனங்காணும் ஆற்றலை பெற்று அதனூடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றும் குழுவினர்கள் ,பழைய மாணவர்கள் உட்பட பாடசாலை சமூகம் பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் அம்மாணவன் ஒரு விஞ்ஞானியாக வருவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியால அதிபர் எம் .எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா கருத்து
இம்மாணவன் ஒழுக்க விழுமியமுள்ளவர்.அவரிடம் நான் கண்ட ஒரு வித்தியாசமான விடயம் யாதெனில் நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளிலும் அதற்குரிய நாட்களை கூறினார்.இவ்விடயம் குறித்து மாணவனின் பெற்றோரை அழைத்து கலந்தாலோசித்து இருந்தேன்.சுமார் 10 வருடங்களுக்குரிய விடயங்களை அவரது ஞாபக சக்தி ஊடாக துல்லியமாக கூறுவதை அவதானித்தேன்.அதாவது 2015 இல் இருந்து 2024 வரையிலான நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளையும் அவர் தெரிவிக்கின்றார்.எதிர்காலத்தி ல் ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என ஆசைப்படுகின்ற மாணவனை நானும் வாழ்த்துவதில் பெரும் மகிழச்சி அடைகின்றேன் என்றார்.
Spread the love