யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பபு வலயத்தினுள் உள்ள சீமெந்து ஆலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அது கடந்த 33 வருட காலங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றது.
இந்நிலையில் மீளவும் தொழிற்சாலையை புனரமைத்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்களை வெட்டி அவற்றின் பாகங்களை இரும்புக்காக தென்னிலங்கையை சேர்ந்த நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர்.
அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இராணுவத்தினர் சீமெந்து தொழிற்சாலையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இரும்புகளை திருடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரும்புகளை வெட்டி வாகனத்தில் ஏற்றி செல்ல முற்பட்ட வேளை காங்கேசன்துறை காவற்துறையினரால் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 780 கிலோ இரும்பை மீட்டு உள்ளதாகவும் , அவர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும்