முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!
முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் முன்பாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் போரில் 14 உறவுகளை இழந்த, மன்னாரைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா எனும் தாயொருவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.