வடக்கில் நிலங்களை விடுவிப்பதற்கான கால நிர்ணயத்தினை இராணுவத்தினர் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்தில் கோரியமைக்கு பதில் அளிக்கும் போதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு இராணுவ பயன்பாட்டிற்காக பொதுமக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2,400 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் மீதியாகவுள்ள 4,100 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் எனவும் மங்கள தெரிவித்துள்ளார்.