194
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி நோயாளிகளின் வாழும் உரிமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படுவதாக, அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டம் நாளைய தினம் வடமேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது. இதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் வடமேல் மாகாணத்தில் உள்ள சகல மருத்துவமனைகளிலும் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
Spread the love