Home இலங்கைசுல்தான் மீரா மொஹைதீனின் கொலை – சந்தேகநபருக்கு மரணதண்டனை

சுல்தான் மீரா மொஹைதீனின் கொலை – சந்தேகநபருக்கு மரணதண்டனை

by admin

 

வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேறியல் நிபுணர், கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(08) மரணதண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

வைத்திய கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றின் வௌிவாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில்  சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 4 வெற்று துப்பாக்கி ரவைகள் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து  வவுனியா – மரக்காளம் பளையில் வைத்து   சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய உடைமையில் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொலை  இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 4 துப்பாக்கி ரவைகளும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிக்கு உரியவை  என இரசாயன பகுப்பாய்வாளர் இன்று(08) வவுனியா மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த மரணமானது துப்பாக்கிச் சூட்டினால் இடம்பெற்றுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதியை கொலை வழக்கின் குற்றவாளியென நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இதுவரை பிணையில் இருந்த குறித்த சந்தேகநபர் இன்று(08) நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More