இரு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்த சீனப் பிரஜை இன்று (08) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த மாதம் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற குறித்த சீனப் பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சா் அவரை நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
தன்னை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவரை நாடு கடமத்துமாறு உத்தரவு பிறப்பிடிருந்தமை குறிப்பிடத்தக்கது