Home இலங்கைமலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு – கண்காட்சி

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு – கண்காட்சி

by admin

 

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக் கிழமை ஆரம்பமானது.
மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக “புறக்கணிக்கப்பட்ட மலைகள்” என்ற தலைப்பில் கிசோகுமாரின் புகைப்பட கண்காட்சியும், “தேயிலை சாயம்”, எனும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் புகைப்படங்களின் கண்காட்சியும் இதில் உள்ளடக்கியுள்ளது.

குறித்த கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை, யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடைபெறும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More