492
குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியியல் கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது , 100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், தேசிய குருதிமாற்று பிரயோக சேவையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடையாளருக்கு கெளரவம் வழங்கினர்.
Spread the love