416
தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council – PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர் வைத்திய கலாநிதி டிலீப் லியனகே அவர்களின் பங்களிப்புடன் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை (PHSRC) சார்ந்த பூரண விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வட மாகாணத்தில் உள்ள தனியார் வைத்திய துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கான பாதுகாப்பான தரமான வைத்திய சேவையானது தனியார் துறையிடமிருந்து கிடைக்கப் பெறுவதை மேற்பார்வை செய்யும் முகமாக அனைத்து மருத்துவத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களும் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையில் (PHSRC) பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்படி பதிவுகளை (www.phsrc.lk) இணையத்தளத்தின் ஊடாக (online) மேற்கொள்ள முடியும்.
வடமாகணத்தில் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையில் பதிவு செய்யப்படாத ஒரு சில நிறுவனங்கள் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
Spread the love