Home இலங்கைகாரைநகர் – ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்

by admin

 

நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் – ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால் , இரு ஊர்களுக்கும் இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பொது மக்கள் , அரச உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

கடல் பாதையில் சுமார் 05 நிமிடத்தில் கடக்க கூடிய ஊருக்கு தரை வழிப்பாதையாக செல்வதாக இருந்தால் , சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More