497
பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான இறுதி அங்கீகாரத்தை சர்வதேச நாணய நிதியம்(IMF) வழங்கியுள்ளது. இதில் 1.2 பில்லியன் டொலர் முதற்கட்டமாகவும் எஞ்சிய தொகை அடுத்த 9 மாதங்களிலும் வழங்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி முக்கியமான நகர்வாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.
நீண்ட கால கூட்டணி நாடாகிய சவுதி அரேபியாவிடமிருந்து 2 பில்லியன் டொலரை பாகிஸ்தான் இந்த வாரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love