Home இலங்கையாழில் ஆலய உண்டியல்களை உடைத்த குற்றத்தில் ஒருவர் கைது

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்த குற்றத்தில் ஒருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணம் மானிப்பாய்  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின்  உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய்  காவல்துறையினர் , சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டு உள்ளதாகவும் , குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More