வாகனம் ஒன்றில் கடலாமை கடத்தப்படுவதாக காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செளத்பார் பிரதான வீதி ரெலிக்கொம் சந்தி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட கடலாமை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடலாமையை வாகனத்தில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகன சாரதி மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.