Home இலங்கையாழில் இடம்பெற்ற தொழிற் சந்தை

யாழில் இடம்பெற்ற தொழிற் சந்தை

by admin
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.   சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த தொழிற்சந்தையை ஏற்பாடு செய்திருந்தன.  500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொழிற்சந்தையில் பங்கேற்றன.
 கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, சுப்பர் மார்க்கெட் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்து கொண்டிருந்தன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More