205
வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் 31 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love