Home இலங்கையாழ்ப்பாணத்திற்கு சென்ற ஐ.நா. சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி

யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஐ.நா. சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி

by admin

 

ஐக்கிய நாடுகள் சபையின்  நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே , பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை  சென்றிருந்  நிலையில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில்
ஈடுபட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரனுக்கும்  இடையில்,  யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை  தொடர்பான விரிவான  கலந்துரையாடல்  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்  மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

அதனை தொடர்ந்து , ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு  சென்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.

யாழ்ப்பாண கோட்டையில்

பின்னர் யாழ்ப்பாண  கோட்டைக்கு   சென்ற  ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ் நகரத்தின் அழகை பார்வையிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More