Home இலங்கையாழ்.போதனாவில் ஸ்மார்ட் போனுக்கு தடை

யாழ்.போதனாவில் ஸ்மார்ட் போனுக்கு தடை

by admin

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க பணிப்பாளர் தடை விதித்துள்ளார் . கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் “கானுலா” பொறுத்தப்பட்டமையால் , சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்களின்  கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More