359
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , காவல்துறை உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் காவல் நிலையம் செல்லாததால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை காவல்துறையினர் , அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அதன் போது அவர் காவல்துறையினருடன் முரண் காவல்துறையினரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக காவல்துறையினர் அங்கு விரைந்து , பருத்தித்துறை காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து . பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love