Home இலங்கைநல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை

நல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை

by admin

 

நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண  காவல்நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து , நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம்  பெற இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர்.  அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது.
தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More