Home இலங்கைகாவல்  நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

காவல்  நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

by admin

 

இலங்கையில் நாடளாவிய ரீதியில்  உள்ள காவல்  நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும்  இதன் காரணமாக   காவல்துறையினருக்கு   எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும்   மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளாா்

இந்தக் கண்காணிப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்யும் வழிமுறைகள்  மற்றும் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More