ஏமனில் நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏமனில் பட்டினி ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ள துறைமுகங்களுக்கு செல்ல கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென இரு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏமனில் சுமார் ஏழு மில்லியன் மக்கள் பட்டினியால் வாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுகங்களுக்கு அருகாமையில் மோதல்கள் இடம்பெற்று வருவதனால் நிவாரணப் பொருட்களை நாட்டுக்குள் பெற்றுக்கொண்டு விநியோகம் செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.