372
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர், அவரின் அறையின் குளியலறையில் விழுந்துள்ள நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளார் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love