சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
முதல் விமானம் 09/27 அன்று காலை 01.10 மணிக்கு, அதில் மூன்று பெண்களும் ஆணொருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
மேலும், மேலும் ஒரு பெண் துபாயிலிருந்து 09/27 அன்று காலை 05.25 மணிக்கு வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவாகும்.
06 கிலோ கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது, சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த குழுவினரை தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.