Home இலங்கைகாரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்பு – ஒருவர் கைது!

காரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்பு – ஒருவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , கடற்படையினர் கண்ணுற்று படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம் , எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More